Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஊடுருவிய 41 பாகிஸ்தானியர்? கொன்று குவித்த ஆப்கானிஸ்தான்!

ஊடுருவிய 41 பாகிஸ்தானியர்? கொன்று குவித்த ஆப்கானிஸ்தான்!
The ministry said the fighters included members of the Islamic State group. (File Photo: Reuters)

பாகிஸ்​தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்​குள் ஊடுருவிய​தாகக் கூறப்​படும் 41 பேரை தங்​கள் படைகள் கொன்​று​விட்​ட​தாக ஆப்கானிஸ்தான் பாது​காப்பு அமைச்​சகம் தெரிவித்துள்​ளது.

பகிரவும் WhatsApp Facebook

காபூல்

பாகிஸ்​தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்​குள் ஊடுருவிய​தாகக் கூறப்​படும் 41 பேரை தங்​கள் படைகள் கொன்​று​விட்​ட​தாக ஆப்கானிஸ்தான் பாது​காப்பு அமைச்​சகம் தெரிவித்துள்​ளது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் பாது​காப்பு அமைச்​சகம் தெரிவித்துள்​ள​தாவது: பாகிஸ்​தானில் இருந்து ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகு​தி​யில் உள்ள நூரிஸ்​தான் மாகாணத்​தின் கம்​தேஷ் மாவட்​டத்​தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்​வாய்க்​கிழமை வரை 3 நாட்​களாக ஊடுருவ முயன்றவர்​களை தடுத்​த​போது மோதல் ஏற்​பட்​டது. இதில் 41 பேரை எங்​கள் படைகள் கொன்​றன. மேலும் 62 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.
கொல்​லப்​பட்​ட​வர்​களில் இஸ்​லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) அமைப்​பைச் சேர்ந்​தவர்​களும் இடம் பெற்றிருந்தனர். நாட்​டின் பாது​காப்பை சீர்​குலைக்கும் யாரையும் அனு​ம​திக்க மாட்​டோம். மீண்​டும் இது​போன்ற முயற்சி மேற்​கொள்​ளப்​பட்​டால் இன்​னும் கடும் பதிலடி கொடுக்​கப்​படும். இவ்​வாறு பாது​காப்பு அமைச்​சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் ஆதர​வுடன் அவர்​கள் ஊடுரு​விய​தாக ஆப்கானிஸ்​தான் பாது​காப்பு அமைச்​சகம் தெரி​வித்த குற்றச்சாட்டு குறித்​து, பாகிஸ்​தான் தரப்​பில் உடனடியாக கருத்து தெரிவிக்​கப்​பட​வில்​லை. எல்​லைப் பகு​தி​யில் ஊடுருவல்காரர்களின் நடமாட்​டம் தொடர்​பான நீண்​ட​காலப் பிரச்சினை​களால், இரு நாடு​களுக்​கும் இடையி​லான உறவில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் இது​வரை எல்லை தாண்​டிய வன்​முறைகளால் ஆப்கானிஸ்​தானில் 1,100-க்​கும் மேற்​பட்ட பொது​மக்​கள் உயிரிழந்த​தாக, ஐ.நா. ஆப்​கானிஸ்​தான் உதவித் திட்​டம் கடந்த வாரம் தெரி​வித்​திருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.
முந்தைய செய்தி
இந்தியாவில் ‘ஆப்பிள் பே’ சேவை அறிமுகம்
அடுத்த செய்தி
Traders call for direct talks on Dharmapuri bus stand

தொடர்புடைய செய்திகள்